கிருமி

விடிந்து எழுந்ததில் இருந்தே தலை வலித்தது. குனிந்தால் மூக்கில் ஒழுகியது. காதுகளுக்குள் சூடு தெரிந்தது. எப்படியும் சுரம் வரும் என்று தோன்றியது. விபரீதமாக ஏதாவது உருக்கொள்வதற்கு முன்னால் டாக்டரைப் பார்த்துவிடலாம் என்று நினைத்தான். ஆனால் அதற்கும் பயமாக இருந்தது. ஊர் இருக்கும் நிலைமையில் எந்த மருத்துவரும் இப்போது பயப்பட ஒன்றுமில்லை என்று சொல்லத் தயங்குவார்கள். பரிசோதனைகளுக்கு எழுதித் தரலாம். ஒரு சாதாரண காய்ச்சல்காரன் உடனடியாகச் சுற்றியிருப்பவர்களின் கவனத்தைக் கவர்ந்துவிட வேண்டி வரும். பரிசோதனைகளின் முடிவில் ஒன்றுமில்லாமலேயே இருக்கலாம். … Continue reading கிருமி